Tuesday, October 28, 2014
இலங்கை::ஆளும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற அமர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை::ஆளும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற அமர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமூகமளிக்காமை ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தற்போது வாடிக்கையாகவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் கேள்வி எழுப்புவதற்கும் அதற்கு பதிலளிக்கும் உறுப்பினர்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கேள்விகளை எழுப்புவதற்கு பட்டியலிடப்பட்டிருந்த 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டு பேர் மட்டுமே பாராளுமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
பதிலளிப்பதற்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேள்விகளுக்கு பதிலளிக்க எவரும் இல்லை எனவும் இது ஓர் உலக சாதனை எனவும் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருப்பதற்கு ஏதேனும் வழி முறையொன்றை உருவாக்கிக் கொள்ள ஆளும் எதிர்க்கட்சிகள் முயற்சிக்க வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment