Tuesday, October 28, 2014
சென்னை::பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜனை அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகத்தை உளவு பார்த்து, பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியதாக உளவாளி அருண் செல்வராஜனை, தேசியப் புலனாய்வு அமைப்பினர் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அருண் செல்வராஜனின் நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோனி, அருண்செல்வராஜனின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அருண்செல்வராஜன், புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment