Thursday, October 23, 2014
இலங்கை::வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்தேவி ரயில் காங்கேசன்துறை வரைக்கும் பயணிக்க விடமாட்டேன் என அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்தேவி ரயில் காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காங்கேசன்துறை வரைக்கும் யாழ்தேவி ரயில் பயணிப்பதனை தடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை வரையில் யாழ்தேவி ரயில் பயணத்தை நீடிப்பதற்கான காரணம் படையினர் பயணிப்பதற்காகவே என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையில் தமிழ் மக்கள் பயணம் செய்ய மாட்டார்கள் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவாஜிலிங்கத்தின் இந்த எச்சரிக்கைக்கு அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment