Thursday, October 23, 2014
இலங்கை::வடக்கின் முக்கிய நகரங்களை சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்ய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் செயற்படும் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்கான திட்டங்களை வகுத்துள்ளது.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் 20 மாடிகள் கொண்ட உயரமான கட்டிடம் ஒன்றை அமைத்தல், அரச நிறுவனங்களின் சுற்றுச் சுவர்களை தகர்த்து திறந்த வெளிப் பூங்கா அமைத்தல், மட்டக்களப்பில் பாரிய கட்டிடங்கள் உட்பட 16 செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மன்னாரில் சர்வதேச மட்டத்திலான விளையாட்டரங்கு மற்றும் பசுமைப் பூங்கா அமைத்தல் என்பன போன்ற செயற்திட்டங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, பூநகரி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தனியார் முதலீட்டில் உயரமான கட்டிடங்கள் எழுப்புதல், பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடக்கின் கடற்கரையோரமாக பல இடங்களில் கடற்கரை பூங்காக்கள் அமைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்திட்டங்கள் அனைத்தும் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையில் நடைபெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment