Thursday, October 23, 2014
நியூயார்க்::ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித
உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆம் அண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான உறுப்பு
நாடுகளை தெரிவு செய்ய நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இந்தியா உறுப்பு
நாடாக மீண்டும் தெரிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில்,
இந்தியாவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில்
இந்த தேர்தல் நடைபெற்றது.
உறுப்புரிமையை பெறுவதற்காக இந்தியா, வங்காளதேசம், கட்டார், தாய்லாந்து,
இந்தோனேஷியா இரகசிய வாக்கெடுப்பில் பேட்டியிட்டன. ஆனால் இந்திய மாத்திரமே
வெற்றி பெற்றுள்ளது.
மனித உரிமைச் சபையின் உறுப்புரிமை பதவியில் இரண்டு தடவைகள் அங்கம் வகித்த
நாடுகள் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ஐக்கிய
நாடுகள் சபையின் விதி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment