Thursday, October 30, 2014
வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் (புலிகூட்டமைப்பின் காடு வெட்டி)
வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் (புலிகூட்டமைப்பின் காடு வெட்டி)
எம்.பி. சிவசக்தி ஆனந்தனின் உரைக்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் நேற்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அரசாங்கம் சிங்கள மக்களுக்கு மாத்திரமே சேவையாற்றுவதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தனது உரையின் போது தெரிவித்தார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சட்டவரம்பை மீறி உரையாற்றுவதாகவும், ஜனாதிபதி சம்பூர் சென்று சகல தமிழ் மக்களுக்கும் குடிநீர் வசதியளிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றுகையில் அரசாங்க செலவில் சம்பூரில் மிகப்பெரிய கோயில் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகவும், கிளிநொச்சியிலும் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சபையில் இவர் பொய் பிரசாரம் முன்னெடுப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இலங்கை வரலாற்றில் கடந்த 100 வருட காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பெளதீக வள மேம்பாட்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியிலேயே கூடுதலான நிதி செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட சகல பாடசாலைகளும் எமது ஆட்சியிலேயே மீள ஆரம்பிக்கப்பட்டன. வடக்கிலுள்ள சகல பிள்ளைகளும் பாடசாலை சென்றுவரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் பெளத்தர்களுக்கு மட்டுமே உதவுவதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து கவலையடைகிறோம் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment