Friday, October 31, 2014
சென்னை::போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை உயர்
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை
இந்தியாவின் திஹார் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்து,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாரதீய ஜனா
கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் மீதான மரண தண்டனை குறித்து தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்திர் கருத்து தெரிவித்துள்ள சாமி, '2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு சென்ற பின்னர் இந்திய உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதுதொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்' என்று கூறியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

No comments:
Post a Comment