Saturday, November 1, 2014

அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து 4 பேர் பலி!

Saturday, November 01, 2014
வாஷிங்டன்::அமெரிக்க விமான நிலையத்தில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் 4 பேர் பலியாகினர்.
 
அமெரிக்காவில் கன்காஸ் பகுதியில் விசிதா என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 9.50 மணியளவில் அங்கு ஒரு குட்டி விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியது.
 
இதனால் அக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அங்கு பந்து போன்று தீப்பிழம்பு ஏற்பட்டு கரும்புகை வானில் எழுந்தது. உடனே மீ்ட்பு படையினரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் கட்டிடம் இடிந்ததில் பலியானவர்கள். ஒருவர் விமானி என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் 5பேர் காயமடைந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment