Monday, October 27, 2014

ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலி: அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

Monday, October 27, 2014
இலங்கை::
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலி என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடுமையாக சாடியுள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக் கட்சியின் ஆதரவு குறித்து நேற்று மாலை சிங்கள வானொலியொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பொறுத்தே நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது. கொள்கை ரீதியாக நாங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
 
ஐக்கிய தேசியக் கட்சி ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியாக செயல்படுகின்றது. பொதுமக்களுக்கு அக்கட்சி மூலம் எதுவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. உயர்தர மேட்டுக்குடியினர் மட்டுமே அக்கட்சி மூலம் பலன் அடைவார்கள். அதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவு என்ற ஒருபோதும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment