Tuesday, October 28, 2014
புதுடில்லி::ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றநளினி, தன்னை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி, தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிம றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஆயுள் தண்டனை : முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், நளினிக்கான மரண தண்டனை பின், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனு மீது, மத்திய அரசு முடிவெடுக்க, 11 ஆண்டுகள் ஆகி விட்டதால், அந்த காலதாமதத்தை காரணம் காட்டி, அவர்களுக்கான மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, இந்த ஆண்டு
பிப்ரவரி, 18ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மூன்று பேரை மட்டுமின்றி, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற மற்றவர்களான, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுவிப்பதாக, தமிழக அரசு
அறிவித்தது. ஆனால், இந்த விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வருவதில் சட்டச் சிக்கல் உருவானது. மேலும், சி.பி.ஐ., விசாரித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் எனில், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மனு தள்ளுபடி : அதனால், மத்திய அரசின் அனுமதியை, தமிழக அரசு பெற வேண்டும் என, தெரிவிக்கும், இந்திய தண்டனை சட்டம், பிரிவு, 435 (1)ஐ எதிர்த்தும், ஆயுள் தண்டனை பெற்ற தன்னை விடுவிக்க உத்தரவிட கோரியும், நளினி சார்பில், உச்ச நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை
No comments:
Post a Comment