புதுடெல்லி::சீனாவுடனான ராணுவ உறவை வளர்த்துக் கொள்ள, இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைளை எந்த நிலையிலும் இலங்கை செயல்படாது என அந்நாட்டு கடற்படை துணைத் தலைமைத் தளபதி ஜெயந்த பெரேரா தெரிவித்தார்.
இந்திய கடற்படைத் தலைமை தளபதி தோவானின் அழைப்பின்பேரில் 5 நாள் அரசு முறைப் பயணமாக டில்லிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஜெயந்த பெரேரா, டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சௌத் பிளாக் வளாகத்தில் இந்திய கடற்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நேற்று ஏற்றுக் கொண்டார். பின்னர் கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தோவானையும், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு குறித்து ஜெயந்த பெரேரா கூறியதாவது:பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா இலங்கை இடையே மிகச் சிறந்த நல்லுறவு நீடித்து வருவதாகவும். இதே போல சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை நல்லுறவை வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார். தெற்கு ஆசியாவில் அமைதியை விரும்பும் நாடாக இலங்கை விளங்குகிறது. என்றும் எங்கள் நாட்டில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறுவதை நான் ஏற்கமாட்டேன் என்றும் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவைப் போல சீனாவும் சில துறைகளில் முதலீடுகளைச் செய்துள்ளது. அதை இலங்கை வரவேற்பதாக கூறினார்.
சீனாவுடனான உறவை வளர்த்துக் கொள்வதற்காக, இந்திய பாதுகாப்புக்கு எந்த நிலையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்றார்.தற்போது நாங்கள் வளர்ச்சியை நோக்கிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கடற்படை
தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்தா பெரேராவிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள்
கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,
இலங்கையில் சீன இராணுவப் பிரசன்னம் கிடையாது எனவும், பாதுகாப்பு விவகாரங்களில் சீனர்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் நல்லெண்ண விஜயங்களையே மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான இலங்கையின் உறவுகள் வர்த்தக ரீதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டு வர இந்தியா அளித்த உதவிகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்
கொழும்பு துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல்கள் வருவது வழக்கமான நடவடிக்கை
தான். கடந்த மாதமும் நல்லெண்ண அடிப்படையில்தான் சீன போர்க்கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன. அந்த நீர்மூழ்கியும் அணுசக்தி
நீர்மூழ்கியல்ல, வழக்கமான நீர்மூழ்கி கப்பல்தான். அங்கு எந்த சீன
வீரர்களும் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இந்தியாவுடன் நாங்கள்
நல்ல உறவு வைத்துள்ளோம். இந்தியா அல்லது எந்த ஒரு நாட்டின் தேசிய
பாதுகாப்புக்கும் நாங்கள் ஒருபோதும் ஊறு விளைவிக்க மாட்டோம். இந்தியாவின்
பாதுகாப்பே, எங்கள் பாதுகாப்பு. சீனா, ரஷியா மட்டுமின்றி அனைத்து அண்டை
நாடுகளுடனும் நாங்கள் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment