Monday, October 27, 2014

புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்த இன்றைய தினம் குன்னூர் நீதிமன்றில் விசாரணை!

Monday, October 27, 2014
குன்னூர்::புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நீதவான் ஜீ.பீ. மித்தால் தலைமையிலான நீதவான் குழு தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் நீதிமன்றில் இந்த வழக்கினை விசாரணை செய்ய உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் சென்னையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, புலிகளின் சார்பில் ஆஜராகவுள்ளார்.

காங்கிரஸ் அரசாங்கம்  புலிகளுக்கு எதிரான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. இந்த தடை சரியானதா இல்லையா என்பது குறித்து வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

புலிகளின் தரப்பு நியாயங்களை நீதிமன்றில் முன்வைக்க இன்றைய விசாரணைகளின் போது சந்தர்ப்பம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment