Monday, October 27, 2014

ரயில் மீது கெப் வாகனம் மோதியதில் நால்வர் காயம்!

Monday, October 27, 2014
இலங்கை::
கந்தானை பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் கெப் வாகனமொன்று, ரயில் மீது மோதி, விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
 
கொழும்பு கோட்டையில் இருந்து ஜா-எல நோக்கிப் பயணித்த ரயிலில் நேற்று பிற்பகல் 3.30 அளவில் கெப் வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் வருகையை அறிவிப்பதற்காக, எச்சரிக்கை சமிக்ஞை போடப்பட்டிருந்த வேளை, ரயில் கடவையின் ஊடாக கெப் பயணித்த போதே விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

No comments:

Post a Comment