இலங்கை::கொழும்பு 8 வனாத்தமுல்ல பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதிகளான மெத்சர உயன மற்றும் சிரிசர உயன நேற்று ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி திட்டங்களின் செயற்பாட்டாலரான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.
மெத்சர உயன மற்றும் சிரிசர உயன முறையே 718 மற்றும் 430 வீட்டு அலகுகளை கொண்டுள்ளதுடன் காஸ்டல் ஸ்ட்ரீட், பேக்கரி தோட்டம், எதிரிசிஸ்க தோட்டம், 54 & 66 தோட்டம், கலிங்க மாவத்தை, பஞ்சிகாவத்தை மற்றும் மயூர பிளேஸ் வாழ்மக்களே இவ் வீடமைப்பு திட்டத்தின் பயனாளிகளாவர்.
சொந்த வீடுகளற்ற அனைவருக்கும் 2020ஆம் ஆண்டளவில் வீடு சொந்தமாகவேண்டும்' என்ற ஜனாதிபதி சிந்தனையின் துரநோக்கிற்கமைய கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் - வசதிகளுடைய குடும்பங்களுக்காக 70,000 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் 26 திட்டங்களின் கீழ் 20,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இவ்வாண்டின் இறுதியில் 5000 வீட்டுத் தொகுதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கலபொட ஞானீஸ்வர தேரர் உட்பட தேரர்கள்- சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம். பௌசி- அமைச்சர்களான விமல் வீரவங்ச- சுசில் பிரேமஜயந்த- காமினி லொகுகே- ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ- பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன- மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான- பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment