Wednesday, October 29, 2014

இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித்தடை பிழையான தகவல்: ராஜித சேனாரட்ன!

Wednesday, October 29, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த எட்டு அம்சங்களில் படகு கண்காணிப்பு முறைமை Vessel Monitoring System  (வி.எம்.எஸ்) மட்டுமே இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது. இதற்கு இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கவிருப்பதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பாராளுமன்ற த்தில் தெரிவித்தார்.
 
இலங்கை மீதான ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித்தடை பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டிரு ப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இது குறித்து அடுத்த மாதம் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடான கலந்துரையாடல் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விளக்கமளிக்க விருப்பதாகவும் கூறினார்.
 
வாய்மொழி விடைக்காக நிரோஷன் பெரேரா எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2012, 2013ஆம் ஆண்டுகளில் மீன்பிடித்துறை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் பல தடவை வரவேற்றிருந்தது.
 
மீன்பிடி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த எட்டு அம்சங்களில் ஐந்து அம்சங்கள் கடந்த வருடத்தில் நிறைவு செய்யப்பட்டிருந்தது. படகுகளைக் கண்காணிக்கும் வி.எம்.எஸ் முறைமை, சர்வதேச எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் உட்பட மூன்று விடயங்களே இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவேண்டியிருந்தது.
 
இதில் வேறுநாட்டு எல்லைகளில் மீன்பிடிப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை மீறுவோருக்கு விதிக்கப்படும் தண்டனைத்தொகை போதாது எனவும், சர்வதேச கடலில் மீன்பிடிப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. படகு கண்காணிப்பு முறைமையைக் கொண்டுவர நான்கு வருடங்கள் பிடித்துள்ளன. இது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஆனால் இது தொடர்பான அமைச்சரவை உப குழுவின் அறிக்கை கிடைக்க இரண்டு வருடங்கள் பிடித்ததோடு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைக்க ஆறு ஏழு மாதங்கள் பிடித்தன.
 
இலங்கையிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் பாரியளவிலான கப்பல்கள் எதுவும் ஏனைய நாட்டு எல்லைகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்து பிடிபட்டது கிடையாது. ஆனால் சிறிய படகுகளில் செல்வோரே இவ்வாறு பிடிபடுகின்றனர். இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கட்டுப்படவேண்டிய தேவை கிடையாது. டூனா ஆணைக்குழுவுக்கே இலங்கை கட்டுப்பட வேண்டும். இவ்விவகாரம் தொடர்பில் டூனா ஆணைக்குழுவுடனும் நாம் பேசி வருகின்றோம்.
 
நாம் மீன்பிடி தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியம் என்ன நோக்கத்துக்காக இவ்வாறு தடைவிதித்துள்ளது என்று விளங்கவில்லையென்றும் கூறினார்.

No comments:

Post a Comment