Wednesday, October 29, 2014
இலங்கை::நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 115 சாதாரண தொழிலாளர்களுக்கும் 4 ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவருகளால் நிரந்தர நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று பத்தரமுல்லை நகர அபிவிருத்தி அதிகார சபை வளாகத்தில் இடம் பெற்றது.
இவ் விழாவில் உரையாற்றி பாதுகாப்புச் செயலாளர்: நாட்டின் வளர்ச்சிக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்குவரும் பங்களிப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும், மாபெரும் கொழும்பு நகரை வாழத்தகுந்த மனித தீர்வுக்களுடன் கட்டியெழுப்பி உலகின் ஏனைய நகரங்களின் தரத்திற்கேற்ப மாற்றியமைக்க கடினமாக உழைக்க வெண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அந்தந்த தேர்ச்சித் துறைகளில் ஆறு மாதம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (தொழில்நுட்ப) திரு ரொஹான் செனவிரத்ன, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமல் பெரேரா, பணிப்பாளர் நாயகம் திரு. ஹர்சன டி சில்வா, பிரிகேடியர் சமந்தா ஜயசுந்தர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment