Tuesday, October 28, 2014
குன்னூர்::புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைநீட்டிப்பு தீர்ப்பாய விசாரணை குன்னூர் நகர் மன்ற கூட்டரங்கில் நேற்று 2வது நாளாக நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி மிட்டல் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணை யின் போது 2 உளவுத்துறை போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்தனர்.
மதிமுக பொது செயலாளர் (புலி பினாமி) வைகோ பங்கேற்று குறுக்கு விசாரணையும் செய்தார். நேற்று நடந்த விசாரணையின்போதும் வைகோ வாதிடுகையில், புலிகள் அமைப்பிற்கு இனியும் தடைவிதிக்க வேண்டிய சூழல் இல்லை. 2 மற்றும் 5 ஆண்டுக்கு ஒருமுறை இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு தடை நீட்டிக்கவும் வேண்டாம்.
தமிழகத்தில் தடையை நீக்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நாங்கள் இதுதொடர்பாக தீர்ப்பாயத்திற்கு வந்து எங்களது கருத்துக்களை எடுத்து கூற இயலாது என்றார்.இதனையடுத்து விசாரணை நிறைவடைந்தது. தடை நீடிக்குமா, விலக்கப்படுமா என்பது வரும் 30ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment