Monday, September 01, 2014
சென்னை::கடந்த 2011–ம் ஆண்டு தனக்கு கூடுதல் பாதுகாப்பை கோரி வந்த
சுப்பிரமணியசாமிக்கு, கடந்த காங்கிரஸ் அரசு அவருக்கு எந்தவித வி.வி.ஐ.பி.
பாதுகாப்புகளை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தன் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு சுப்பிரமணியசாமி மீண்டும் கடிதம் எழுதினார். குறிப்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா, ராகுல் மீது குற்றம் சாட்டி இருப்பதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த விளக்கத்தை கேட்ட மத்திய உள்துறை அதிகாரிகள் சுப்பிரமணியசாமிக்கு இசட் பிரிவுக்கு இணையான பாதுகாப்பு கொடுக்க சம்மதித்துள்ளனர். அதன்படி இனி சுப்பிரமணியசாமி பாதுகாப்பை 40 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் ஏற்பார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி சுப்பிரமணியசாமி இந்தியாவில் எங்கு சென்றாலும் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்ற பெயர் சொல்ல விரும்பாத மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment