Monday, September 01, 2014
இலங்கை முஸ்லீம்கள் அராபிய கலாச்சாரத்தை
பின்பற்றி உடைஅணிவது நாட்டில் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தலாம்
என தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.
இஸ்லாம் இலங்கைக்கு அராபியாவிலிருந்து வரவில்லை இந்தியாவிலிருந்தே வந்தது என அதன் பேச்சாளர் முகமட் முசாமில் தெரிவித்துள்ளார்.
வரலாற்றுரீதியாக இலங்கை முஸ்லீம் பெண்கள் அபயா அணியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நோக்கத்துடன் சில முஸ்லீம் குழுக்கள் அராபிய ஆடைகளை பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்ய நினைக்கும் மேற்குலகின் ஆதரவுடைய அந்த சக்திகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரேபிய ஆடைகளை இலங்கையில் அணிய வேண்டிய அவசியம் கிடையாது என ஜே.என்.பி. கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அரேபிய கலாச்சார உடைகளை அணிவது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அரேபிய ஆடைகளை அணிவதனால் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மதம் மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வரவில்லை எனவும், இந்தியா மற்றும் ஆசியாவிலிருந்தே இஸ்லாமிய மதம் இலங்கைக்கு வந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முஸ்லிம் பெண்கள் சேலை முந்தானையிலேய தலையை மறைத்துக் கொள்வதகாவும், ஹபாயா அணிவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலை அணி அணிவதனால் இன சமூகங்கள் அனைத்திற்கும் இடையில் ஒற்றுமை காணப்பட்டதாகவும், தற்போது அரேபிய ஆடைகளை அணிவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சில முஸ்லிம்கள் அரேபிய ஆடைகளை அணிவதில் மக்களை தூண்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் சதித் திட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது எனவும் சில தரப்பினர் இலங்கையை ஈராக்காக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment