Monday, September 1, 2014

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிற்கு இலங்கை விஜயம் செய்ய அனுமதியளிக்க வேண்டிய அவசியமில்லை: கெஹலிய ரம்புக்வெல்ல!

Monday, September 01, 2014
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிற்கு இலங்கை விஜயம் செய்ய அனுமதியளிக்க வேண்டிய அவசியமில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பலவந்தமான காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு கோரியிருந்தது.

எனினும், இலங்கைக்கு விஜயம் செய்ய இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்கு அனுமதியளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில், காணாமல் போதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரே நோக்கத்திற்காக இரண்டு குழுக்கள் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹன் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மற்றமொரு விசாரணை நடாத்த அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment