Monday, September 01, 2014
லண்டன்::வரும் 2015-ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத்
தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த சமயத்தில் ஐரோப்பிய யூனியனை விட்டு
இங்கிலாந்து விலகியிருக்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கேமரூனை வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு வெளியேறுவதன் மூலம் பிரஸ்ஸல்ஸ் இங்கிலாந்திற்குத் திருப்பி அளிக்கும் அதிகாரங்கள் பற்றித் தெளிவாகத் தெரியாத போதும் இத்திட்டத்தினை அவர்கள் ஆதரித்து வருகின்றனர்.
தங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் உரிமைகள் குறித்துப் பேசுவதாகவும், 2017ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியன் ஒன்றிய உறுப்பினர் தகுதியைத் தக்க வைப்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்துவதாகவும் கூறியுள்ள கேமரூன் இதில் நீடிக்கவே தான் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பிரிட்டனின் உறுப்பினர் தகுதி குறித்த மாற்றம் எதுவாக இருப்பினும் தங்களின் 2015ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளில் தங்களின் தலைவர் கேமரூனை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment