Sunday, September 28, 2014
நியூயார்க்::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை
சந்தித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலைமைகள் குறித்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பான் கீ மூனிடம் விளக்கியுள்ளார்.
நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு
நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்களுடன் சந்திப்பு நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திற்காக அவரைப் பாராட்டிய திரு.
பான், போரின் பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களை
ஏற்றுக்கொண்டதோடு, இவ்வாறான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு எஞ்சியுள்ள
சவால்களும் வெற்றிகொள்ளப்படும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஏனைய அடைவுகளுக்கு மத்தியில், பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ள எல்லா
கண்ணிவெடியகற்றல் நடவடிக்கைகள், சுகாதார சேவைகளின் முன்னேற்றம், முன்னாள்
போராளிகளின் புனர்வாழ்வும், மீள் இணைப்பும் உள்ளடங்கலாக இடம்பெற்றுள்ள
அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார். போரால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ள பாடசாலைகளின்
மறுசீரமைப்புத் தொடர்பாகவும் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி தகவலளித்தார்.
முன்னர் இருந்திருக்காதவாறு, தேசிய பரீட்சைகளில் நாட்டின் சிறந்த
முடிவுகளில் சில தற்போது வட மாகாணத்திலிருந்து வெளிவருவதாக ஜனாதிபதி
ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
வெற்றிகரமான அரசியல் செயற்பாடுகளுக்கு விரிவான அரசியல் ஆலோசித்தலின் தேவையையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இது விடயத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துபேச வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவரது இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை விஜயம் செய்யுமாறு திரு. பான் இற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி. பாலித கொஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments:
Post a Comment