Saturday, September 27, 2014
சென்னை::இலங்கையில் புலிகளுக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் இழந்த திலீபனின் 27–ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோயம்பேட்டில்நேற்று உண்ணாவிரதம் இருக்க தமிழ் அமைப்பினர் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. உண்ணாவிரதம் இருக்க தடையும் விதித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை டைரக்டர் கவுதமன் தலைமையில் 25 கல்லூரி மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்களை பாதுகாப்புக்கு நின்ற மேற்கு மண்டல இணைக் கமிஷனர் சண்முகவேல் தலைமையில் துணை கமிஷனர் மனோகரன், உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதை தொடர்ந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க வந்த தமிழர் தேசிய முன்னணி நிறுவன தலைவர் (புலி ஆதரவு பினாமி) பழ.நெடுமாறன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழ்தேச கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பட்டுக்கோட்டை ராமசாமி, தமிழர் முன்னேற்றபடை வீரலட்சுமி உள்ளிட்டோர் வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்புக்காக அங்கு 100–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக் கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment