Thursday, September 11, 2014

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை உளவு பார்க்கவில்லை: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Thursday, September 11, 2014
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை உளவு பார்க்கவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

வட மாகாண முதலமைச்சரையோ அல்லது வடக்கு மக்களையோ உளவு பார்க்கவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பிற்கு காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை உளவு பார்த்து வருவதாகவும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை வடக்கு இளைஞர்கள் கண்காணிக்க வேண்டுமெனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கோரியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment