Thursday, September 11, 2014
இலங்கையில் பாதுகாப்பு தொடர்பில் தற்பொமுது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதியளவாக காணப்படுவதால் புதிதாக எந்தவொறு நடவடிக்கைகளும் தேவையில்லை என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
எனவே, அல் - காய்தாவினால் தெற்காசிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களையம் ஏற்படுத்தாது என தான் நம்புவதாக தெரிவித்த அவர், உள்நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாடுகள் மூலமாகவோ நாட்டிற்கு விடுக்கப்படும் சகல விதமான சவால்களுக்கும் முகம்கொடுக்க பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவூம் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதன் போது அல் காய்தா அமைப்பு தெற்காசியாவிலுள்ள சில நாடுகளுக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரிகேடியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-
அல் காய்தாவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி அதன் மூலம் தமது இலக்குகளை அடைந்து கொள்வதே பயங்கரவாத அமைப்புக்களின் நோக்கமாகும் அவ்வாறானதான ஒன்றாகவே இதனை நாம் கருதுகின்றௌம் என்றார்.
அவர்களின் அறிவிப்பானது இலங்கையை இலக்கு வைத்தது என்று கூறமுடியாது. எது எவ்வாறாயினும், எமது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் சிறந்த முறையில் திட்டமிட்ட அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment