Wednesday, September 10, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை மீண்டும் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை::இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை மீண்டும் இன்று ஐக்கிய நாடுகள் சபையில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் 27வது அமர்வில் நேற்று உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனை வலியுறுத்தினார்.
மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
ஆனால் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும் என்று அவர் உறுதி அளித்தார். ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நாளை சாட்சி பாதுகாப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையானது, வரையறை மீறிய செயற்பாடு என்பது மட்டுமல்லாது இலங்கையின் உள்நாட்டு விசாரணையையும் மலினப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளிள் விசாரணையானது, இலங்கை மக்கள் மற்றும் சமூகங்களின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனாலும் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்வதாக ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் பின் ராட் அல் ஹுசைனின் தலைமையில், மனித உரிமைகள் அலுவலகம், கலாசாரம் மற்றும் சமூக விடயங்களை கருத்திற்கொண்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று தமது நாடு எதிர்ப்பார்ப்பதாகவும் ரவிநாத் தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை தொடரவுள்ளதாகவும், சாட்சி பாதுகாப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment