Wednesday, September 10, 2014
இலங்கை::புலிகளை விடவும் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஆபத்தானது என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை::புலிகளை விடவும் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஆபத்தானது என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.
புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென பொதுபல சேனா இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் விதாரான்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கடும்போக்குவாத சக்திகள் சஹரிய சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் சில வங்கிகளில் சஹரிய சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
நாட்டில் சஹரிய சட்டத்தை அமுல்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி, மிலிந்த மொரகொட, அலவி மௌலானா போன்றவர்கள் ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment