Sunday, September 7, 2014

கடவுச்சீட்டு விநியோக முறைமையில் மாற்றம் : விண்ணப்பிக்கும் நபர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட உள்ளது!

Sunday, September 07, 2014
கடவுச் சீட்டு விநியோக முறைமையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. விண்ணப்பதாரிகளின் பத்து கைவிரல் அடையாளங்களும் சேகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த புதிய நடைமுறை அமுல் செய்யப்பட உள்ளது.

உலகின் சில நாடுகளில் பயன்படுத்தப்படும் பயோ மெற்றிக் முறைமையிலான கடவுச் சீட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெற்றிக் முறைமையை எவ்வாறு அறிமுகம் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் புதிய கடவுச் சீட்டு விநியோக முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறுகிய காலத்தில் இவ்வாறு புதிய நiடுமுறையை அமுல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகிறது. சாத்திய ஆய்வு, சட்ட அமுலாக்கம் போன்றவற்றில் சிக்கல் நிலவி வருவாகக் குறிப்பிடப்படுகிறது.
 

No comments:

Post a Comment