Saturday, September 6, 2014

அமெரிக்காவில் அழுத்தங்களினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது: மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்!

அமெரிக்காவின் அழுத்தங்களினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – அஜித் நிவாட் கப்ரால்:-

 September 6, 2014
அமெரிக்காவில் அழுத்தங்களினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையிலும் இலங்கைக்கு போதியளவு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 வீதமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 2020ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 150 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment