Friday, September 05, 2014
பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு தேவைகளுக்கு அமைவாகவே வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றிக்கொள்ளப்படும் எனவும், விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வெறுமனே முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் வடக்கில் புதைக்கப்பட்ட பெருமளவு நிலக்கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புதைக்கப்பட்ட 98 வீதமான கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவே பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் வலியுறுத்தி வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது.
இராணுவத்தினர் கள நிலைமைகளை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கால கிரம அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாண ஆளுனரின் அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை உத்தியோகபூர்வமாக சந்திப்பதற்கு, மாகாண ஆளுனரின் அனுமதி அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபை நிர்வாக அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை புறக்கணித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வட மாகாண அபிவிருக்காக ஒதுக்கிய பணத்தில் 10 வீதமான பணமே இதுவரையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர்
சீ.வீ.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை
அகற்றிக்கொள்ள முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு தேவைகளுக்கு அமைவாகவே வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றிக்கொள்ளப்படும் எனவும், விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைய வெறுமனே முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகளினால் வடக்கில் புதைக்கப்பட்ட பெருமளவு நிலக்கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புதைக்கப்பட்ட 98 வீதமான கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவே பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் வலியுறுத்தி வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியது.
இராணுவத்தினர் கள நிலைமைகளை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கால கிரம அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வட மாகாண ஆளுனரின் அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை உத்தியோகபூர்வமாக சந்திப்பதற்கு, மாகாண ஆளுனரின் அனுமதி அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபை நிர்வாக அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை புறக்கணித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வட மாகாண அபிவிருக்காக ஒதுக்கிய பணத்தில் 10 வீதமான பணமே இதுவரையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment