Friday, September 05, 2014
காணமற்போனோர் குறித்து விசாரணை செய்யும்
ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் தண்டனைகளை
வழங்க முடியாது எனவும் அதனை ஜனாதிபதியே தீhமானிக்க வேண்டுமெனவும் அதன்
தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
படையினருக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அவர்கள் அது குறித்த விசாரணையில் ஒத்துழைப்பார்கள் என நான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் தமது பணிகளை முன்னெடுப்பதற்காக இலங்கை வந்துள்ள போதிலும் அவர்கள் ஆலோசனைகளை மாத்திரம் வழங்குவார்கள்.
காணமற்போனேர் குறித்து விசாரித்தவேளை எமக்கும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தன. இதனை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்தே எமது ஆணை விஸ்தரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் ஆணைக்குழு யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்.
படையினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அவர்கள் அது குறித்த விசாரணையில் ஒத்துழைப்பார்கள் என நான் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக:கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும், சட்ட மா
அதிபருக்குமே காணப்படுவதாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவிற்கு தண்டனை விதிக்கும் அதிகாரமோ அல்லது உரிமையோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்க்பபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ அல்லது காவல்துறை அதிகாரிகளை விசாரணைக்குழுவில் நியமிப்பதனை மக்கள் விரும்பவில்லை எனவும், இதன் காரணமாகவே ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதவான்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணகைளின் போதும் ஐவர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச நிபுணர்கள் விசாரணையாளர்களாக கடமையாற்ற மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் தொடர்பில் அவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment