Sunday, September 7, 2014

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது: கோத்தபாய ராஜபக்ச !

Defence Secretary Gotabaya Rajapaksa

இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்றிருந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் பொழுது, இக்கருத்தினை கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
புலிகளின் முக்கியமான தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் துணையால்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகியதாகவும், விடுதலைப் புலிகளுக்கு நீண்டகாலமாக உதவிகள் நல்கிய வெளிநாட்டினரும் பலரும் இதன் உருவாக்கத்தில் உள்ளனர் எனவும் தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
 
மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் கருத்துரைக்கும் பொழுது : இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள வி.உருத்ரகுமாரன் 'நாடுகடந்த அரசாங்கம்' ஒன்றை நிறுவும் வேலைகளில் இறங்கினார். இந்த அமைப்பு தன்னை 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என்று அழைக்கின்றது . தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று கூறும்,இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தனி நாட்டை உருவாக்குவதற்கு, அயல் நாட்டு அரசாங்கங்களிடம் முறையிட்டு அவர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.
 
அவர்கள் சொல்லிக்கொள்ளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் சுமார் இருபது 'அமைச்சர்களும்' , 'உதவி அமைச்சர்களும்' உள்ளனர். இது உருவானது புலிகளின் பிரபலமான தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் துணையால் தான். விடுதலைப் புலிகளின் இந்தத் தீவிரமான ஆதரவாளர்களில் விடுதலைப் புலிகளுக்குப் பல ஆண்டுகளாக உதவிகள் நல்கிய வெளிநாட்டினரும் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.
 
பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்து, தமிழர் தாயகத்தினை சிங்களம் அரசபயங்கரவாதம் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டவேளை, தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை அனைத்துலக அரங்கில் உயிர்ப்புடன் வைத்திருப்பதானது, சிறிலங்காவுக்கு எப்போதுமே அச்சம்தரக்கூடிய ஒன்று என்பதனையே, கோத்தபாயவின் இக்கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment