Friday, September 26, 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து அவசரமாக பேச வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கான சூழ்நிலைகள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர இந்த தருணத்தில் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான காரணங்களுக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளை நிராகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்படுகி;ன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்றின் இறைமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் விசாரணைகள் அமைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளின் பின்னரே சர்வதேச ரீதியான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணை நடத்தும் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை எனவும் இது இயற்கை நீதிக்கொள்கைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்சிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அண்மைக்காலமாக பக்கச்சார்பான முறையில் சில தெரிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த எதேச்சாதிகார போக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், இவ்வாறு செயற்படுவதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடையக் கூடுமென ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
முறைகேடான நடவடிக்கைகளை சட்ட ரீதியாக்க
ஒத்துழைப்பு வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய
நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட
வாய்மொழிமூல அறிக்கைக்கு பதிலளித்த ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி
ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். பிழையான செயன்முறைகளை சட்ட
ரீதியாக்கும் முனைப்புக்களை இலங்கை அரசாங்கம் ஆதரிக்காது எனவும், சரியான
பொறிமுறைமை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே ஐக்கிய நாடுகள்
மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிற்கு ஆதரவளிக்குமாறு கோருவோரின்
கோரிக்கையை கௌரவமாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து அவசரமாக பேச வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கான சூழ்நிலைகள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர இந்த தருணத்தில் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கியமான காரணங்களுக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளை நிராகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்படுகி;ன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்றின் இறைமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் விசாரணைகள் அமைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளின் பின்னரே சர்வதேச ரீதியான பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணை நடத்தும் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை எனவும் இது இயற்கை நீதிக்கொள்கைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்சிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அண்மைக்காலமாக பக்கச்சார்பான முறையில் சில தெரிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த எதேச்சாதிகார போக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், இவ்வாறு செயற்படுவதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடையக் கூடுமென ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment