Friday, September 26, 2014
லடாக்கில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ராணுவ படைகளை திரும்பபெற இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் லடாக், இமாசலபிரதேசத்தின் சுமர் ஆகிய இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தின் மக்கள் விடுதலைப் படையினர் ஊடுருவினர். சுமர் பகுதிக்குள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியை கடந்து அவர்கள் 5 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவி இருக்கிறார்கள். முதலில் அங்கிருந்து வெளியேறுவதுமாக போக்கு காட்டி வந்த சீன துருப்புகள் தற்போது நிரந்தரமாகவே சுமர் பகுதிகளில் முகாமிட்டு விட்டனர். பின்னர் அங்கிருந்து சீனப்படை வெளியேறவில்லை. இதையடுத்து நிலைமையைச் சமாளிப்பதற்காக இந்திய ராணுவமும் பதிலடியாக 1,500 வீரர்களை சுமர், லடாக் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நமது வீரர்கள் நீண்ட காலம் தங்கியிருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.
இந்நிலையில் லடாக்கில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ராணுவ படைகளை திரும்பபெற இந்தியா மற்றும் சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து ராணுவம் வெளியேற தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாள் அமெரிக்க பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் இந்திய செய்தியாளர்களிடம் பேசுகையிகையில் "லடாக் விவகாரம் தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டதை உங்களிடம் தெரிவிக்கையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காலஅவகாசமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. என்று கூறினார்.
ஐ.நா. சபையில் சுஷ்மா சுவராஜ், சீனா வெளியுறவுத் துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். அப்போது எல்லை விவகாரம் தொடர்பாக அவருடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ராணுவப்படைகளை திரும்பபெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மொத்தப்படையும் திரும்ப பெறப்படும். என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment