Saturday, September 27, 2014

ரஷ்ய வீராங்கனை 170 நாள்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுகிறார்!! First Russian woman in International Space Station mission!!

Saturday, September 27, 2014
அல்மாட்டி::சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிவதற்காக முதல் ரஷ்ய விண்வெளி வீராங்கனை சோயுஸ் விண்கலத்தில் பயணமானார். அவருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்களும் சென்றனர்.

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.25 மணிக்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கிளம்பியது. இந்த விண்கலத்தில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் சமோகுட்யேவ், அமெரிக்காவின் பேர்ரி வில்மோர் என்ற 2 விண்வெளி வீரர்களும், ரஷ்யாவை சேர்ந்த எலெனா செரோவா என்ற வீராங்கனையும் சென்றனர். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் ரஷ்ய பெண் என்ற பெருமையை எலெனா பெறுகிறார்.

விண்கலத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. நாங்கள் நலமாக இருக்கிறோம் என்று ரஷ்ய வீரர் சமோகுட்யேவ் ரஷ்ய கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பி உள்ளார். தற்போது அந்த விண்கலம் சரியான விண்வெளி பாதையில் சென்று  கொண்டிருக்கிறது என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. இந்த விண்கலம் மிக விரைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்று அடையும். அதன் பிறகு அங்குள்ள ரஷ்யாவை சேர்ந்த மேக்சிம் சுரோவ் அமெரிக்காவின் ரெய்டு விஸ்மேன் மற்றும் ஜெர்மனை சேர்ந்த அலெக்சாண்டர் ஜெர்ஸ்ட் ஆகிய வீரர்களுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் பிறகு மேக்சிம் குழுவினர் வரும் நவம்பரில் பூமிக்கு திரும்புவார்கள்.
 
தற்போது சென்றுள்ள வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 170 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வர். பின்னர் வரும் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் கூ றியுள்ளது. ரஷ்யாவில் ரூ. 6 1 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்ட சோயுஸ் விண்கலத்தில் பறப்பதற்கு 38 வயதான ரஷ்ய பெண் எலெனா செரோவாவுக்கு 7 ஆண்டுகள் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment