Thursday, September 25, 2014

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து: பாதுகாப்பு அமைச்சு!

Thursday, September 25, 2014      
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இராணுவப் படையினர் வீதிகளை கூட்டி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இராணுவம் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னிலிருந்தும் இராணுவத்தை அகற்றிக்கொள்ளுமாறு கூட்டமைப்பு கோரி வருகின்றது என குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் இராணுவத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலிப் பிரச்சாரங்களை செய்து வரும் அதேNளை, சந்திரிக்கா கொழும்பிலிருந்து கொண்டு இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்து வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நாட்டின் ஆண் பெண்களே இராணுவத்தில் கடமையாற்றி வருகின்றார்கள் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய எதிர்க்கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

2009ம் யுத்த நிறைவின் பின்னர் இராணுவமும் அதன் வளங்களும் யுத்தத்தின் பின்னரான பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்திற்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்ட படைவீரர்களை, யுத்த நிறைவின் பின்னர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

படையினரை வலுப்படுத்தியிருக்காவிட்டால் ஒரு போதும் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாக சந்திரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் அவ்வாறான தொழில்நுட்பம் புலனாய்வுப் பிரிவினரிடம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமாகாது என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment