Saturday, September 27, 2014

ஜெயலலிதாவுக்கு சிறை - தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டத்தில் குவிப்பு!

Saturday, September 27, 2014
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
 
சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
 
கடைகளை அடைக்க்ச சொல்லி ஒரு கும்பல் வலியுறுத்தியதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆலங்குள்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 
சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment