Saturday, September 27, 2014

சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி- பெங்களூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Saturday, September 27, 2014
சென்னை::தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்
தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- சித்தராமையா: பெங்களூரில் பாதுகாப்பு தீவிரம்
பண்ருட்டியில் பஸ் ஓடவில்லை
ஜெ. வழக்குத் தீர்ப்பு மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்: தமிழிசை கருத்து
ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!
 
ஜெ. வழக்கு தீர்ப்பு எதிரொலி: தமிழகத்தில் வன்முறை நீடிப்பதால் பதற்றம்
தீர்ப்பு எதிரொலி.. மதிய உணவை சாப்பிட மறுத்த ஜெயலலிதா.. அமைச்சர்களும் சாப்பிடவில்லை
சென்னை ராயப்பேட்டை லாய்ட்ஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மகளிர் அணியினர் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
18 ஆண்டுகள் இழுத்தடித்து கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெ.
தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்கள் வீடுகள் மீது தாக்குதல்
தென் சென்னை மா.செ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல்
கோபாலபுரம் கருணாநிதி வீடு, சித்தரஞ்சன் சாலை ஸ்டாலின் வீடு, அறிவாலயத்திலும் கல்வீச்சு
போலீசார் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர்- பெங்களூர் போலீஸ் கமிஷனர்
ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து..அ.தி.மு.க. மகளிரணியினர் கண்ணீர்!
நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதிராக வந்த தீர்ப்பு
 
சென்னை நகரில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது
சாலைகளில் வாகனங்களைநிறுத்தி அதிமுகவினர் ஆர்பாட்டம்
அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம்
திருச்சியில் 4 பயணிகள் காயம் என தகவல்
சென்னை சுப்ரமணியசுவாமி வீட்டில் அதிமுகவினர் கல்வீச்சு
கோவை, மதுரையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கல்வீச்சு
நான் தான் புகார் கொடுத்தேன், திமுக பெயர் வாங்குவதா?: சு. சாமி
சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் கல்வீசித் தாக்குதல்
ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அடைக்குமாறு மிரட்டும் அதிமுகவினர்
 
தமிழகம் முழுவதும் போராட்டங்களில் குதித்த அதிமுகவினர்
சசிகலா, இளவரசி, சுதாகரனும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
ஓராண்டுக்குக் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை வராது
எனக்கு உடல் நிலை சரியில்லை.. தண்டனையை குறையுங்கள்- நீதிபதியிடம் ஜெ
சிறை தண்டனை காலம் + 6 வருடத்துக்கு என 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை வரும்
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது
பட்டாசு வெடித்துக் கொண்டாடக்கூடாது என தொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவு!
-தமிழகத்தின் அடுத்த முதல்வர் பட்டியலில் நவநீத கிருஷ்ணன், ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் அடிபடுகிறது
ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ.பதவியும் பறிபோகிறது
ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு
விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு J Jayalalithaa DA case : Protest against Subramanian Swamy in Chennai போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டு முன் சோர்வுடன் அமர்ந்திருக்கும் தொண்டர்கள்! 3 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ தீர்ப்பு வெளியாகும் என தகவல்! அதிகாரப்பூர்வமற்ற தகவல்களால் அதிமுக அலுவலகம் முன்பு குவிந்திருந்த கூட்டம் குறைகிறது!
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முன் இரு தரப்பு வக்கீல்கள் வாதம்
ஜெ. வழக்கு தீர்ப்பு: தமிழகத்தின் பல இடங்களில் திடீர் மின் தடை; கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்!
 
கருணாநிதி வீட்டு முன்பு கொண்டாட்டங்கள் அதிகரிப்பு!
''வெற்றி! வெற்றி!'' - 1 மணிக்கு முன்னால் அதிமுகவினர் கொண்டாட்டம்!
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களால் அதிமுக அலுவலக வாசலில் உருவ பொம்மை எரிப்பு. திமுக அலுவலகம் முன்பு கொண்டாட்டம்!
சட்டப் பிரிவு 13 (1) இ படி ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்ததாக கன்னட சேனல்களில் செய்தி ஒளிபரப்பு
ஜெ. வழக்கில் தீர்ப்பு கூறும் நேரத்தில் தமிழகத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றாக "கட்"
சென்னை அதிமுக அலுவலகம் முன்பு கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு.
ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்ததாக செய்தி ஒளிபரப்பும் கன்னட சேனல்கள்
 
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது
சற்று முன் ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து, சில நிமிடம் காரில் ஓய்வெடுத்து, மீண்டும் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததாகத் தகவல்.
முழு தீர்ப்பும் தமிழ், ஆங்கிலத்தில் படிக்கப்படுவதால் தீர்ப்பு வெளியாவதில் தாமதமாகவதாகவும் தகவல்
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டால் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்
 
நீதிமன்றத்திலேயே ஜெ, சசி, இளவரசி, சுதகரன் காத்திருப்பு...
66 கோடி சொத்துக் குவிப்பை விசாரிக்க மூன்று கோடி செலவு!
தமிழகம் வரும் அனைத்து கர்நாடக பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிட்டன
தமிழக பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன
தமிழகம் – கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்
ஜெ. வழக்கு தீர்ப்பு அறிவாலயம் வாசலில் திமுகவினர் வெடியோடு காத்திருப்பு
 
கருணாநிதி வீடு, அண்ணா அறிவாலயத்திற்குப் போலீஸ் பாதுகாப்பு
தீர்ப்பு தள்ளிப் போவதாக தெரிவித்த ஜெ. வக்கீல்.. பல இடங்களில் பவர் கட்.. ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு?
ஜெ. வழக்கு தீர்ப்பு செய்தியை இருட்டடிக்க திட்டமா?
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை
கவலையான முகத்துடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த 2 அதிமுக வழக்கறிஞர்கள்
 
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு : நீதிமன்றத்தில் செய்தியாளர் யாருக்கும் அனுமதி இல்லை...
பெங்களூரு கோர்ட் அருகே தடியடி
தீர்ப்புக்கு முன்பே லட்டு தர ஆரம்பித்த அதிமுகவினர்
கோர்ட் முன் தள்ளு, முள்ளு
தீர்ப்பு விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவிக்க இருக்கிறார் அரசு வழக்கறிஞர் பவானிசிங்
 
ஜெ. வழக்கு தீர்ப்பு வெளியானவுடன் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் கருணாநிதி, ஸ்டாலின், வைகோ
ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இனிப்புகளுடன் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
ஜெ. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார் நீதிபதி குன்ஹா
 
இன்னும் சற்று நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு வெளியாகும்.. திக்.. திக் நிமிடங்கள்
தமிழக- கர்நாடகா எல்லை கிருஷ்ணகிரியில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீடீர் மின்வெட்டு
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழக அமைச்சர்கள் பெங்களூரில் முகாம்
 
எந்த நேரத்திலும் தீர்ப்பை அறிவிப்பார் நீதிபதி மைக்கேல் டி- குன்ஹா
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் உள்ளே
ஜெ.வின் சென்னை போயஸ் கார்டன், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லங்களில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
கோர்ட்டுக்குள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்
500 மீட்டர் தொலைவில் 'பிரஸ்'
கோர்ட் வளாகம் முன் தொண்டர்கள்
 
-18 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு
-ராகு காலம் முடிந்த நல்ல நேரத்தில் கோர்ட்டுக்குள் வந்த ஜெயலலிதா
-நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தது ஜெயலலிதாவின் கார் அணிவகுப்பு
-நீதிமன்றத்துக்குள் நுழைய விடாமல் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியநாதன் தடுத்து நிறுத்தம்
-பெரும் வாக்குவாதத்துக்கு பின் ஓ.பி, நத்தம் விஸ்வநாதத்துக்கு அனுமதி
-நீதிமன்ற வளாகத்தை நெருங்கினார் ஜெயலலிதா
-அம்மா வாழ்க கோஷம், விசில் சப்தத்துடன் கொடிகளை அசைத்த ஆயிரக்கணக்கான அதிமுகவினர்
-இரட்டை விரலை காட்டியவாறு சென்றார் ஜெயலலிதா
-10.30 மணிக்கு மேல் தான் நல்ல நேரம்.. அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நுழையும் ஜெ.
 
-18 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு
-நீதிமன்ற வளாகத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது ஜெயலலிதாவின் வாகனம்
-பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பரப்பன அக்ரஹாரத்திற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்
-பெங்களூரில் சிறப்பு கோர்ட் அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய முயன்ற அதிமுகவினர் மீது தடியடி

No comments:

Post a Comment