Saturday, September 27, 2014
நியூயார்க்::பிரதமர் நரேந்திரமோடி 5 நாள் சுற்றுப்
பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2002–ம் ஆண்டில்
குஜராத் கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நியூயார்க் தெற்கு மாவட்ட
கோர்ட்டு நரேந்திர மோடிக்கு சம்மன் வழங்கியுள்ளது.
அமெரிக்கா
சென்றுள்ள மோடி அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார். மேலும் அமெரிக்க வாழ்
இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு உள்பட 2 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்கிறார்.
அ
ப்போது பிரதமர் நரேந்திர மோடியின் கையில்
கோர்ட்டு சம்மன் கொடுப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதி மையம் (ஏ.ஜே.சி) என்ற அமைப்பு இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், மோடியிடம் சம்மன் வழங்குபவர்
அதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும். சம்மனை 10
அடி தூரத்தில் இருந்தபடியோ, அல்லது அங்கிருந்து அவர் அருகே வீசி எறிந்து
வழங்குபவர் இந்த பரிசு தொகையை பெற தகுதி உடையவர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்க நீதி மைய அமைப்பின் நியூயார்க் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த்சிங் பன்னுன் தெரிவித்துள்ளார்.
ஆனால்
அந்த அமைப்பின் தலைவர் ஜோசப் விட்டிங்டன் கூறும் போது சம்மனை மோடியிடம்
வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை வழங்கிவிட்டால் 2002–ம் ஆண்டு
நடந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வெற்றி அடையாளமாக
கருதப்படும்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திரமோடியிடம் யாரும் சம்மன் வழங்க அனுமதிக்க முடியாது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சையது அக்பருத்தீன் கூறும் போது
இந்திய பிரதிநிதி (பிரதமர் நரேந்திர மோடி) பாதுகாப்பு வளையத்துக்குள்
இருக்கிறார். எனவே அவரிடம் யாரும் எந்தவித சம்மனும் வழங்க முடியாது. அந்த
கேள்விக்கே இடமில்லை. இந்த பிரச்சினையை அரசு கையாண்டு வருகிறது. என்றார்.
No comments:
Post a Comment