Tuesday, September 2, 2014

புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது: பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனீஸ்!

Tuesday, September 02, 2014
இலங்கை::புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போன்றே அவர்களின் பிரச்சாரப் போராட்டமும் வலுவானது என பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார்.
 
 ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான போர் எவ்வாறு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டதோ அதே தீவிரம் புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்துக்கு எதிராகவும் காண்பிக்கப்பட வேண்டும். அதே முனைப்பு அதே தந்திரோபாங்களைப் பயன்படுத்தி  புலிகளுக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்தையும் முறியடிக்க வேண்டியது அவசியமானது.
 
புலிகளினால் ஊடகங்களின் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தை சாதாரண விடயமாக கருதப்பட முடியாது. அதுவும் ஓர் யுத்தமேயாகும். புலிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார யுத்தத்தின் பாரதூரத் தன்மையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.
 
சமூக ஊடக வலையமைப்புக்கள், ஏனைய ஊடகங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  புலிகளின் பணச் சலவை மற்றும் சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment