Tuesday, September 2, 2014

இலங்கை இராணுவக் குழுவினர் பிலிப்பைன்ஸ் விஜயம்!

Tuesday, September 02, 2014
இலங்கை::பாதுகாப்பு சேவைகள் மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் பிரதானி மேஜர் ஜெனரல் வல்கம தலைமையிலான இலங்கையின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கடந்த 13ஆம் திகதி முதல் வரை பிலிப்பைன்ஸிற்கு கல்விச் சுற்றுலா விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் உடன் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முகமான இவ்விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் முப்படைத் தலைமையகங்கள், இராணுவக் கல்லூரிகள் மற்றும் பாரம்பரிய பரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ள இக்குழுவினர் பிலிப்பைன்ஸுக்கான இலங்கைத் தூதுவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

No comments:

Post a Comment