Tuesday,September, 02, 2014
மாஸ்கோ::கடும் சண்டை நடைபெற்று வரும் கிழ்ககு உக்ரைன் பகுதியை தனி நாடு என அறிவிப்பதற்கு தனது ஆதரவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசியபோது புதின் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதில் புதின் தெரிவித்ததாவது:
உக்ரைன் விவகாரத்தில் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் சட்டபூர்வமான நலன்களைக் காக்கும் விதத்தில் அங்கு தனி நாடு அமைக்கும் விவகாரத்தில் தீர்மானம் வரும் வகையில் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்ரு அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் தற்போது நிலவும் சூழலுக்கு மேர்கத்திய நாடுகள்தான் காரணம் என்றும் அப்பாவி மக்கல் சுட்டுக் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று புதின் மேலும் கூறினார்.
உக்ரைனின் கிழ்ககுப் பகுதியினருக்கு அதிகாரப் பகிர்வை மட்டுமே இது வரை வலியுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், முதல் முறையாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அப்பகுதியில் தனி நாடு அமைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment