Friday, August 15, 2014
காஸா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவும் பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் மற்றும் இமானியா அரபுக்கல்லூரி என்பன இணைந்து ஏற்பாடு செய்த கண்டன பேரணி இன்று பாலமுனையில் நடைபெற்றது.
பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஊர்வலப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியுடாக சென்று அல்-ஹிதாயா வித்தியாலயம் வரை நடைபெற்றது.
இப்பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பதாதைகளையும், சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

இறுதியில் இங்கு உலமாக்கலால் காஸா மக்களுக்காக துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டதுடன் இஸ்ரேல் நாட்டின் கொடியும் எரிக்கப்பட்டது

No comments:
Post a Comment