Friday, August 15, 2014
19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் விசாரணை நடத்துவர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதனை தவிர்க்கவே இவ்வாறு இறுதிக் கட்ட யுத்தம் பற்றி மட்டும் விசாரணை நடத்தப்பபடுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட 16 புலித் தலைவர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்துவதே ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும் பிரதான நபருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment