Friday, August 15, 2014
சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின்
பின்னணியிலுள்ள சதிகள் குறித்து விரிவாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின்
ஆயுட்காலத்தை இந்திய மத்திய அரசாங்கம் மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீ
வ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி அம்சங்களை ஆராய சி.பி.ஐ.யின் பல்நோக்கு கண்காணிப்பு குழு (MDMA) அமைக்கப்பட்டது. இதில், உளவுத்துறை, ரோ, வருவாய் உளவுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அக்குழுவின் ஆயுட்காலம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், பணிக்காலம் முடிந்த 2 மாதங்கள் கழித்து, திடீரென தற்போது
மத்திய அரசாங்கம், அக்குழுவுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
அளித்துள்ளது.
ராஜீவ் கொலையில், புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாதனின்
பங்கு பற்றி விசாரணை நடந்து வருவதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன. இவரே
கொலைக்கான நிதியுதவி செய்தவர் என்றும் அக்குழு சந்தேகிக்கிறது.
பத்மநாதன்ன் நான்காண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில், கைது
செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment