Saturday, Aug ,16, 2014
இஸ்லாமாபாத்::காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்தியா- பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் திர்வு காண வேண்டும், என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
அந்நாட்டு சுதந்திர தின விழா வையொட்டி ஆற்றிய உரையில் இது குறித்து அவர் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம். இதனால் இருதரப்பு உறவில் நிகழும் பதற்றத்தை போக்க முடியும். அதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டறிய இயலும். அண்டைநாடுகளுடன் அமைதியை ஊக்குவிப்பதே எங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
பாகிஸ்தான் அமைதியான நாடு. எங்கள் நாட்டினுல் அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ நாங்கள் வரும்புகிறோம். ஆப்கானிஸ்தானிலும் நீடித்த அமைதி நிலவ வேண்டும். அதன் மூலம் அந்தப் பகுதியே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட இயலும் என்றும் நவாஸ் கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. நேரில் போரிட துணிவில்லாததால் அவ்வாறு மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப் மேற்கண்டவாறு பேசியுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் முப்படை தளபதிகள், அமைச்சர்கள், தூதர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment