Saturday, Aug ,16, 2014
சென்னை::ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி மாநில முதல் மந்திரி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அம்மாநில கவர்னர்கள் வரவேற்பு விருந்து அளிப்பது மரபு.
இந்த மரபினையொட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை சகாக்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா நேற்று வரவேற்பு விருந்து அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாரதத்தின் பாரம்பரிய கலைகளான பரத நாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முதலமைச்சர் ஜெயலலிதா, பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, தமிழக சட்டசபை சபாநாயகர் பி.தனபால், மற்றும் மாநில அமைச்சர்கள்,
எம்.பி., எம்.எல்.ஏக்கள், சென்னை மேயர் சைதை துரைசாமி, தமிழக அரசின் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.ராமானுஜம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது, முன்னாள் இந்திய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் சிலையை ராஜ்பவன் வளாகத்தில் கவர்னர் கே.ரோசைய்யா திறந்து வைத்தார்.
.jpg)
No comments:
Post a Comment