Sunday, August 03, 2014
இலங்கை::பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான புதிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திவரும் வலுவானதும், நெருக்கமானதுமான இராஜதந்திர மற்றும் நட்பு ரீதியான உறவு கார ணமாக, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அந்நாடு மீது வைத்திருந்த பலமான நம்பிக்கை தற்போது படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடமேறியதும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த நாளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத் தந்துவிடுவார் எனும் அதீத நம்பிக்கையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் எஞ்சியிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடி யாக்கி இல்லாமற் செய்து வருகிறது.
இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் தம்மையே முதலா வதாக அழைத்து இலங்கைத் தமிழர் விடயமாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்துவார் எனவும், இலங்கை அரசிற்கு தமது சொற்கேட்டு பாரிய அழுத்தத்தைக் கொடுப்பார் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந் தது. ஆனால் இன்று அவ்வரசு ஆட்சிபீடமேறி மூன்று மாதங்க ளுக்கு மேலாகியும் இவர்கள் குறித்து எவ்வகையிலும் சிறிதள வேனும் அலட்டிக்கொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துடனேயே சகல விடயங்களிலும் பேசி வருகிறது.
தமிழ்க் கூட்டமைப்பு எதிர்த்து வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்துமாறும் இந்தியா கூட்டமைப்பிடம் கேட்டும் உள்ளது. முரண்டு பிடிக்கும் எதிர்ப்பு அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு கைவிட வேண்டும் எனவும் இந்தியா தனது அறிக்கைகள் மூலமாக மறைமுகமாகத் தெரிவித்தும் வருகிறது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்றிருந்தால் இந்தியாவின் இந்தக் கடும் போக்கில் தளர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் இது தொடர்பாக அன்று தமிழ்க் கூட்டமைப்பும், முதலமைச்சரும் விடுத்த காரசாரமான அறிக்கைகளே இன்றைய நிலைக்குக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை அமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இந்தியா ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டாது எனவும், இலங்கையில் இன அழிப்பு என்ற ஓர் சம்பவம் ஒருபோதும் நடைபெறவில்லை என்பதை ஐ.நா மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் கூட சுட்டிக் காட்டவில்லை என்றும் இந்திய அரசின் முக்கியஸ்தரான டாக்டர். சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தி ருந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர் கள் ஐவரடங்கிய குழுவினால் தெரி விக்கப்பட்டிருந்தது. இது இந்திய அரசாங்கத்தின் கருத்தாகவே அவர்களி னால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கைக்கு எதிராக எந்தவொரு அரசியல் காய்நகர்த்தல்களை யும் இந்தியா மேற்கொள்ள மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அத்துடன் வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கொழும்பில் இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந் தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்பர் என இந்தியா அறிவித்துள்ளது. இதுவும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment