Sunday, August 3, 2014

காதோடு காதாக...!

Sunday, August 03, 2014
இலங்கை::* சிறிதரனின் உரையை கேட்டு தலையில் கை வைத்த மாவை
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளை திறப்பு விழாவில் சிறிதரன் எம்.பி, தான் அக்கட்சியில் இல்லாத ஒருவர் போல அக்கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை அக்கட்சியின் பிரமுகர் கள் பலரையும் முகஞ்சுளிக்க வைத்ததாம். கட்சி என்ன செய்தது? கட்சித் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என தனக்கும் கட்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதது போலக் கேள்விக் கணைகளை அடுக்கினாராம். ஸ்கூலில் வாத்தியாராக இருந்த இவரை அரசியலுக்குள் இழுத்தது எவ்வளவு பெரிய தவறு என மாவை எம்.பி. தனது தலையில் கை வைத்தாராம்.
 
* புலம்பெயர் தமிழரும் சித்தாவின் கவலையும்

 
ஊரில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வரும் புலம்பெயர் வாழ் தமிழர்களை அரசாங்கம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறதாம். சுவிஸிற்கு சுற்றுலா சென்று வந்த சித்தார்த்தன் ஐயாவின் கவலை இது. ஒரு காலத்தில் ஐயா ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்து புலம்பெயர் தமிழர்களை போட்டுக் கொடுத்தபோது இது பற்றி யோசிக்கவில்லையே. இப்போ மாறி நிற்பதால் கதை மாறி வருகிறது. ஊரில் வந்து முதலிடுங்கோ என்று அரசாங்கமே புலம்பெயர் சமூகத்திற்கு அழைப்பு விட்டுவருவது ஐயாவிற்கு தெரியாதோ அல்லது தெரியாதது போல நடிக்கிறாரோ?
 
* அரசியல் பதவி ஆசை யாரைத்தான் விட்டது?
 
உள்நாட்டில் எந்தப் பிரச்சினையும் படலாம். அது சகோதரச் சண்டை. ஆனால் வெளிநாட்டிற்கு எமது நாட்டைக் காட்டிக் கொடுக்க முற்பட்டால் சம்பந்தியென்றாலும் விடமாட்டேன் என்பது போல் முதலமைச்சர் விக்கியின் அறிக்கைக்கு அமைச்சர் வாசுதேவ கண்டனம் தெரிவித்திருக்கிறார். உண்மைதான், அரசியலுக்கு வந்ததால் நல்ல மனுசன் நாலு பக்கத்தாலும் விமர்சிக்கப்படுகிறார். பேசாமல் நல்ல பென்சனை எடுத்துக்கொண்டு வீட்டில் பஜனை செய்வதுடன், முதுமையை இனிமையாகக் கழித்திருக்கலாம். என்ன செய்வது, அரசியல் பதவி ஆசை யாரைத்தான் விட்டது?

No comments:

Post a Comment