Monday, August 11, 2014

நாட்டின் அபிவிருத்திக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே: ஸ்ரீ புத்தரஹித தேரர்!

Monday, August 11, 2014
நாட்டின் அபிவிருத்திக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே என அஸ்கிரிய மஹாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரஹித தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இல்லை என்று ஒருவருக்கும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்த விஹாரையான உடுவத்த ஸ்ரீ ராம விஹாரையில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் நேற்று மாலை பூஜை நிகழ்வுகள்  ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே உடுகம ஸ்ரீ புத்தரஹித தேரரா இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment